சவாலில் சாதித்த கோஹ்லி பாண்டயாவை முந்தினார்..

சவாலில் சாதித்த கோஹ்லி பாண்டயாவை முந்தினார்..
உடற்பயிற்சி குறித்த சவாலில் பாண்ட்யாவை விட இன்னும் சிறப்பாக செய்து அசத்தினார் கோஹ்லி.

இந்திய அணி ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 29. முதுகுப்பகுதியில் செய்த ஆப்பரேஷன் காரணமாக கடந்த 2019, செப்.,க்குப் பின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. விரைவில் அப்பா ஆக உள்ள இவர், சமீபத்தில் அந்தரத்தில் குதித்து குதித்து ‘புஷ் அப்’ செய்த வீடியோவை தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதில்,‘வலிமையாக, உடற்தகுதியுடன் இருக்க, பயிற்சியில் ஈடுபடுகிறேன். சகோதரர் குர்னால் பாண்ட்யாவுக்கு ஒரு சவால். என்னைப் போல நீயும் எத்தனை முறை இப்படி செய்கிறாய் பார்க்கலாம்,’ என தெரிவித்து இருந்தார்.

இந்த உடற்பயிற்சி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லிக்கு மிகவும் பிடித்துவிட்டது போல. பாண்ட்யாவை விட இன்னும் சிறப்பாக செய்து அசத்தினார். ஏற்கனவே உடற்தகுதியை சிறப்பாக பராமரிக்கும் இவர், அந்தரத்தில் பறந்து ‘புஷ் அப்’ செய்த போது, கூடுதலாக இரு கைகளையும் தட்டி அசத்தினார். இந்த வீடியோவை தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அவர்,‘ஹேய், ஹர்திக் பாண்ட்யா, உனது பறக்கும் ‘புஷ் அப்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இத்துடன் நான் எனது கைகளை சேர்த்து தட்டியுள்ளேன்,’ என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments