எங்க பௌலர்களால் எந்த அணியையும் எங்களால் வெற்றி கொள்ள முடியும்!! அசார் அலி பேட்டி.

எங்க பௌலர்களால் எந்த அணியையும் எங்களால் வெற்றி கொள்ள முடியும்!! அசார் அலி பேட்டி.
       லண்டன் : இங்கிலாந்து அணியின் தற்போதைய பேட்டிங் ஆர்டர் சரியாக இல்லை என்றும் எளிதில் உடைத்து விடலாம் என்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.உலகத்தில் எந்த அணியையும் எதிர்கொண்டு வீழ்த்தும் வலிமை தங்களது பௌலர்களிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகள் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளன. 
 இதையொட்டி பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குபயணம் மேற்கொண்டுள்ளது.இதையொட்டி இங்கிலாந்துக்கு நேற்று பாகிஸ்தான் அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கொரோனா பரவலையொட்டி, அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் அணியினர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். 20 வீரர்கள் பயணம் இந்த பயணத்தை முன்னிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு கடந்த வாரத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 10 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் இரு வீரர்கள் தாங்களாகவே வெளியில் கொரோனா பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்த நிலையில் மீண்டும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைகளை பிசிபி மேற்கொண்டது. இதையடுத்து சிலருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. இதனிடையே, 20 வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள் இங்கிலாந்து சென்றடைந்துள்ளனர். 
       சிறப்பாக இல்லாத பேட்டிங் ஆர்டர் இந்நிலையில் கடந்த 2018ல் அலாஸ்டர் குக் ஓய்வு பெற்றதற்கு பின்பு இங்கிலாந்து அணியின் துவக்க பேட்டிங் ஆர்டர் சரியாக இல்லை என்றும் எனவே அவர்களை பாகிஸ்தான் பௌலர்கள் எளிதாக வீழ்த்துவார்கள் என்றும் அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர், பிராட், ஆன்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் உள்ள போதிலும் அந்த அணியை பாகிஸ்தான் எளிதாக வீழ்த்தும் என்றும் அவர் கூறியுள்ளார். பாக். பௌலர்கள் வீழ்த்துவார்கள் அலாஸ்டர் குக்கிற்கு பிறகு இங்கிலாந்து அணி, பல்வேறு காம்பினேஷன்களை முயற்சித்து பார்த்துள்ளதாகவும், ஆனால் அவற்றில் எதிலும் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்றும் அவர் மேலும் கூறினார். அதனால் பாகிஸ்தான் பௌலர்கள் அவர்களை எளிதாக எதிர்கொண்டு வீழ்த்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறந்த பாக். பௌலர்கள் உலகில் எந்த அணியுடன் மோதினாலும், அவர்களுக்கு எவ்வளவு அதிகமாக கிரிக்கெட் அனுபவம் இருந்தாலும், அவர்களை பாகிஸ்தான் பௌலர்கள் எளிதாக வீழ்த்துவார்கள் என்றும் அசார் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தங்களது பௌலர்கள் இளம்வயதினராக இருந்தாலும் பயிற்சியாளர்கள் வக்கார் யூனிஸ் மற்றும் முஸ்தாக் அகமது ஆகியோரின் அனுபவத்தை சேர்த்துக் கொண்டு சிறப்பாக விளையாடி இங்கிலாந்தை வீழ்த்துவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments