16 அணிகள் டி20 உலக கோப்பையை நினைத்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது- மைக் ஹசி

16 அணிகள் டி20 உலக கோப்பையை நினைத்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது- மைக் ஹசி
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டத்தை நினைத்தாலே படுபயங்கரமாக இருக்கிறது என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இந்த வருடம் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துவிட்டது.

ஆனால், ஐசிசி இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டமிடுதலை நினைத்தாலே படுபயங்கரமாக இருக்கிறது என்று முன்னாள் பேட்ஸ்னே் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடத்த இருப்பது எனக்கு உண்மையிலேயே பயத்தை அளிக்கிறது. அதற்கான காரணம் உள்ளது. ஒரு அணி ஆஸ்திரேலியாவுக்கு வருகிறது என்றால் சரியானது. அந்த அணியை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி தொடருக்கு சிறப்பாக தயார் படுத்தி விடலாம்.

ஆனால் ஏராளமான அணிகள் வரும்போது அவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்பின் அவர்களை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பலத்து முன்னெச்சரிக்கையுடன் அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கான திட்டத்தை வடிவமைப்பது படுபயங்கரமானது. இதற்கிடையே டி20 உலக கோப்பை 2021 அல்லது 2022 தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.

ஆனால் இந்தியா தொடருக்கு நான் ஆதரவு கொடுப்பேன். ஏனென்றால் ஒரு அணி என்பதால் ஒரே இடத்தில் அவர்களை எளிதாக கையாள முடியும். உதாரணத்திற்கு அடிலெய்டு மைதானம் ஓட்டல் தொடர்புடன் கட்டப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய அணியைச் சேர்ந்தவர்கள் அங்கேயே இருக்க முடியும்.

அதன்பின் பயிற்சி, தொடருக்கு தயாராகி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட முடியும்’’ என்றார்.

Post a Comment

0 Comments