கிரிக்கெட்ல என்ன சந்தேகம் வந்தாலும் அவருக்கு தான் போன் பண்ணுவேன்..இளம் வீரர் பேட்டி

கிரிக்கெட்ல என்ன சந்தேகம் வந்தாலும் அவருக்கு தான் போன் பண்ணுவேன்..இளம் வீரர் பேட்டி

  கிரிக்கெட் குறித்த ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக ராகுல் டிராவிட்டுக்குத்தான் போன் செய்வேன் என்று விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட்டின் கீழ் விளையாடிய அனுபவம் மிக சிறந்தது என்றும், இதுவரை அதுவே தனக்கு உதவி வருவதாகவும் அவர் மேலும் கூறினார். ஐபிஎல்லில் தனக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தபோது, தன்மீது நம்பிக்கை வைத்து, தைரியமாக போய் விளையாடி திறமையை நிரூபிக்க தனக்கு டிராவிட் ஊக்கம் அளித்தார் என்றும் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.  கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். அன்டர் 19 அணியிலிருந்து ஐபிஎல் வரை ராகுல் டிராவிட்டிடம் கிரிக்கெட் குறித்த நுணக்கங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு சாம்சனுக்கு கிடைத்தது. தற்போது வரை அந்த அறிவே அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டிலும் உதவி வருகிறது. இளவயதில் ராகுலுடன் சந்திப்பு முன்னாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட், தன்னுடைய கேரியரின் போதும் சிறப்பாக செயல்பட்டவர், தற்போதும் இளம் வீரர்களுக்கு பயிற்சியின்மூலம் சிறப்பான வழிகாட்டியாக உள்ளார். 
 இதனிடையே தனது 18வது வயதிலேயே ராகுல் டிராவிட்டுடன் பழகும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவரை போன்ற ஒருவர் தனது வாழ்க்கையில் கிடைத்தது தான் செய்த புண்ணியம் என்றும் சாம்சன் தெரிவித்துள்ளார். டிராவிட்டுடன் விளையாடும் வாய்ப்பு கடந்த 2013ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன் முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் இந்த அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிராவிட் தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் சாம்சனுக்கு கிடைத்தது. திறமையை நிரூபிக்க தன்னுடைய 18வது வயதில் தனக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த அணி தன்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கியதாகவும் சாம்சன் தெரிவித்துள்ளார். 

 மேலும் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட், தன்னுடைய முதல் போட்டியின்போது தன்னிடம் வந்து, போய் விளையாடி உன்னுடைய திறமையை நிரூபி என்று ஊக்கமளித்ததாகவும் சாம்சன் தெரிவித்துள்ளார். இதுவரை 93 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 27.61 சராசரியுடன் 2209 ரன்களை குவித்துள்ளார். மேலும் 10 அரைசதங்களையும் 2 சதங்களையும் அவர் அடித்துள்ளார். தனக்கு கிரிக்கெட்டில் ஏராவது சந்தேகம் ஏற்பட்டால் ராகுல் டிராவிட்டிற்கு எந்நேரமும் கால் செய்வேன் என்றும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்


Post a Comment

0 Comments