மீண்டும் வருகிறது IPL.. எந்த நாட்டில் நடக்கிறது தெரியுமா?
ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபுகள் அமீரகம் அல்லது இலங்கையில் நடத்த பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
உலகின் அதிக லாபம் கொட்டும் விளையாட்டுத் தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது அதனால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கணக்கில் கொண்டு எப்படியாவது நடத்தி தீர்வது என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதனால் வெளிநாடுகளில் ஆளில்லாத மைதானங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இது சம்மந்தமாக ஐக்கிய அரபுகள் அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஐபிஎல் ரசிகர்களுக்கு கூடிய விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று தெரிகிறது.
0 Comments