டிராவிட்,ரெய்னா,பதான் இணைந்து தீட்டிய திட்டம், மாட்டிய பாக்கிஸ்தான் வீரர்! ரெய்னா பகிர்ந்த சுவாரசிய தகவல்
2006 இல் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரை ஆட்டமிழக்கச் செய்ய அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட் திட்டம் வகுத்தார். சுரேஷ் ரெய்னாவை வைத்து டிராவிட் தீட்டிய அந்த திட்டம் வெற்றி பெற்றது.
இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, கேப்டன் டிராவிட் இணைந்து பாகிஸ்தான் வீரரை ஆட்டமிழக்கச் செய்தனர். அந்த சம்பவம் பற்றி சுரேஷ் ரெய்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். கேப்டன் ஆன புதிதில் என்ன செய்தார் தெரியுமா? தோனி பற்றி அந்த முன்னாள் வீரர் ஓபன் டாக்! சிறந்த கேப்டன் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் வரிசையில் கங்குலி, தோனி, விராட் கோலிக்கு மட்டுமே பலரும் இடம் அளித்து வருகின்றனர்.
2005 முதல் 2007 வரை இந்திய அணி கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் குறித்து பலரும் அதிகம் பேசுவதில்லை. டிராவிட் பற்றி முன்னாள் வீரர்கள் சமீபத்தில் கவுதம் கம்பீர், இர்பான் பதான் போன்ற வீரர்கள் ராகுல் டிராவிட்டின் கேப்டன்சி குறித்து புகழ்ந்து பேசி வருகின்றனர். அவர் கேப்டன்சியில் ஆடி உள்ள சுரேஷ் ரெய்னாவும் டிராவிட்டின் தலைமைப் பண்பு, திட்டமிடுதல் பற்றி பேசினார். பாகிஸ்தான் தொடர் 2006இல் நடந்த பாகிஸ்தான் போட்டி ஒன்றில் டிராவிட் திட்டம் போட்டு விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததை பற்றி குறிப்பிட்டார்.
அந்த ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி. பாகிஸ்தான் பேட்டிங் நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடி வந்தது. துவக்க வீரர்கள் சல்மான் பட் மற்றும் கம்ரான் அக்மல் நிதான ஆட்டம் ஆடி வந்தனர். கம்ரான் அக்மல் ஒரு கட்டத்தில் ரன் குவிக்க தயார் ஆனார். இர்பான் பதான் பந்துவீச்சு அப்போது நடந்த சம்பவத்தை விவரித்தார் சுரேஷ் ரெய்னா. அப்போது இந்திய அணி விக்கெட் வீழ்த்தியே ஆக வேண்டிய நிலையில் இருந்தது. அது இந்திய அணியின் ஏழாவது ஓவர். அப்போது இர்பான் பதான் பந்து வீசி வந்தார். சல்மான் பட் ஒரு ரன் ஓடினார். டிராவிட் போட்ட திட்டம் கம்ரான் அக்மல் பேட்டிங் செய்ய வேண்டிய நிலையில், திட்டம் தீட்டினார் ராகுல் டிராவிட்.
அவர் ரெய்னாவிடம் பாயின்ட் திசையில் பீல்டிங் நிற்க முடியுமா? என கேட்டுள்ளார். நிச்சயம். எப்படி நிற்க வேண்டும் என கேட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா. தயாராக நில்லுங்கள் பாயின்ட் திசையில் முன் புறம் குனிந்து, கேட்ச் பிடிக்க தயாராக நிற்குமாறு ரெய்னாவிடம் கூறி உள்ளார் டிராவிட். அடுத்த பந்தை வீசினார் இர்பான் பதான். கம்ரான் அக்மல் பந்தை வேகமாக அடித்தார். பந்து நேராக பாயின்ட் திசையை நோக்கி பறந்தது. கேட்ச் சரியாக சுரேஷ் ரெய்னா கைகளில் தஞ்சம் அடைந்தது பந்து. கம்ரான் அக்மல் எளிதாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். கேப்டன், பந்துவீச்சாளர், பீல்டர் என அனைவரும் சேர்ந்து இந்த கேட்ச்சில் சம்பந்தப்பட்டு இருப்பதால் இது இன்னும் தன் நினைவில் உள்ளதாக கூறி உள்ளார்.
இந்தியா வெற்றி பெற்ற அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 161 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆர்பி சிங் 4, இர்பான் பதான் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்திய அணி 32.3 ஓவரில் இலக்கை எட்டி வென்றது. டிராவிட் 59, ரெய்னா 32* ரன்கள் எடுத்து இருந்தனர்
0 Comments