கடந்த 30 வருடங்களில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிய ஒரே தமிழக வேகப்பந்து வீச்சாளர்!

கடந்த 30 வருடங்களில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிய ஒரே தமிழக வேகப்பந்து வீச்சாளர்!
கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடவுள்ளார். 

சமீபத்தில் கேரள அணி, ரஞ்சி கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சந்தீப் வாரியர். 10 ஆட்டங்களில் 44 விக்கெட்டுகளை எடுத்தார். இதுவரை 57 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 186 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

வெளிமாநிலத்திலிருந்து ஒருவர் தமிழக அணியில் விளையாடும் அளவுக்குத் தமிழ்நாட்டில் நல்ல வேகப்பந்து வீச்சாளருக்கான பற்றாக்குறை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் ஆடுகளங்களும் வெப்ப நிலையும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

தமிழ்நாட்டிலிருந்து இந்திய அணிக்கு இதுவரை 30 பேர் விளையாடியுள்ளார்கள். அவர்களில் கடந்த 30 வருடங்களில் லட்சுமிபதி பாலாஜி மட்டுமே டெஸ்டில் விளையாடிய ஒரே தமிழக வேகப்பந்து வீச்சாளர். 

இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய அணிக்காக விளையாடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர்கள்

எம்.ஜே. கோபாலன் 1 டெஸ்ட் (1934)
சி.ஆர். ரங்காச்சாரி 4 டெஸ்டுகள் (1948)
டிஏ சேகர் 2 டெஸ்டுகள், 4 ஒருநாள் ஆட்டங்கள் (1983)
பி அருண் 2 டெஸ்டுகள், 4 ஒருநாள் ஆட்டங்கள் (1986)
டி குமரன் 8 ஒருநாள் ஆட்டங்கள் (1999)
எல். பாலாஜி 8 டெஸ்டுகள், 30 ஒருநாள், 5 டி20 ஆட்டங்கள் (2003)

Post a Comment

0 Comments