பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்று நினைத்து பார்த்தேன் பயிற்சியை தொடங்கிய ஸ்மித் சொல்கிறார்
கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் மாதத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மைதானங்கள் சென்று பயிற்சி மேற்கொள்ளாத நிலை ஏற்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.
இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் பயிற்சி மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘‘3 மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் முதல் பந்தை சந்திக்கிறேன். குட் நியூஸ்....பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்று நினைத்து பார்த்தேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
0 Comments