ஹார்திக் பாண்டியா காயம்- பந்துவீசிய கோலி! வைரல் வீடியோ

    வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய ஹார்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பெவிலியன் திரும்பினார். ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்றாக கோலி பந்துவீசினார்.


    இந்தியா, வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் புனேவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

      பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ் இருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. குறிப்பாக, சிராஜ் அடிக்கடி வித் கொடுத்ததால், வங்கதேச ஓபனர்கள் சில பவுண்டரிகளை அடித்தனர். பும்ரா வீசிய ஷார்ட் பாலில் தான்சித் சிக்ஸர் அடித்தார். மேலும், வங்கதேச ஓபனர்கள் இருவரும் அடிக்கடி இறங்கு வந்து, பேட்டை சுற்றியதால், அதிக ரன்கள் கசிய ஆரம்பித்தது. விக்கெட்களை எடுக்க முடியவில்லை.

ஹார்திக் பாண்டியாவுக்கு காயம்:

     இந்நிலையில், ஆட்டத்தின் 9ஆவது ஓவரை வீசிய ஹார்திக் பாண்டியா, தனது 2 மற்றும் 3ஆவது பந்தில் பவுண்டரியை விட்டுக்கொடுத்தார். அப்போது, இரண்டாவது பவுண்டரியை தடுக்க காலை பயன்படுத்தி பார்த்தார். அப்போது, கால் தவறி கீழே விழுந்த அவருக்கு, இடது காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பந்துபோட ஆயத்தமானார். இருப்பினும், சரியாக ஓட முடியாத காரணத்தினால் பெவிலியன் திரும்பினார். அந்த ஓவரில் எஞ்சிய மூன்று பந்துகளையும் கோலிதான் வீசினார்.


Post a Comment

0 Comments