ரிஷப் பன்டின் வொர்க்-அவுட் வீடியோவை வெளியிட்டு பங்கமாக கலாய்த்த சாஹல்!

ரிஷப் பன்டின் வொர்க்-அவுட் வீடியோவை வெளியிட்டு பங்கமாக கலாய்த்த சாஹல்!
கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் விளையாடிய ஒருநாள் தொடரில் பங்கேற்றார் சாஹல்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். கொரோனா வைரஸால் கிரிக்கெட்டுக்கு பிரேக் வந்துள்ள நிலையில், தன் சக வீரர்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கலாய்த்து வருகிறார் சாஹல். இந்த இக்கட்டான நேரத்தில் பலரது முகங்களில் சிரிப்பை வரவழைத்து வருகிறார் சாஹல். 

தற்போது அவர் டார்கெட் செய்த நபர் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட். டிரெஸ்ஸிங் அறையில் பன்ட், இந்திய அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளர் நிக் வெப் உடன், பயிற்சியில் ஈடுபடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் சாஹல். வீடியோவில் பன்ட், ஆக்ரோஷமாக பாக்ஸிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க அவரைப் போலவே செய்து காட்டி கிண்டல் செய்கிறார் சாஹல். இந்த வீடியோவை சாஹல், தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர, பல கிரிக்கெட் ரசிகர்களும் வேடிக்கையாக கருத்திட்டு வருகிறார்கள். பன்டும் போஸ்டுக்குக் கீழ், ஸ்மைலி இமோஜிக்களைப் பறக்கவிட்டுள்ளார். 
ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார் சாஹல். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மூலம் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கும் முனைப்பில் உள்ளார் சாஹல். கடந்த மார்ச் 29 ஆம் தேதி, ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அந்தத் தொடர் தற்காலிகமாக தள்ளிப் போயுள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் எப்படியாவது ஐபிஎல் தொடரை நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ முயன்று வருகிறது. 

கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் விளையாடிய ஒருநாள் தொடரில் பங்கேற்றார் சாஹல். அப்போது இரண்டு போட்டிகளில் விளையாடிய சாஹல் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி, இந்திய பந்து வீச்சாளர்களிலேயே சிறந்தவராக விளங்கினார்.

Post a Comment

0 Comments